பகவானின் இடமாறுதல் உத்தரவு தற்காலிகமாக நிறுத்தி வைப்பு?

ஆசிரியரை மாற்றக்கூடாது என மாணவ-மாணவிகள் கண்ணீர்
பகவானின் இடமாறுதல் உத்தரவு தற்காலிகமாக நிறுத்தி வைப்பு?
x
மாணவ - மாணவியரின் பாசப் போராட்டத்தால் ஆசிரியர் பகவானின் இடமாறுதல் உத்தரவு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக மாவட்ட கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. திருவள்ளூர் மாவட்டம் வெளியகரம் கிராமத்தில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளியில் ஆங்கில ஆசிரியராக பணியாற்றிய பகவான் கடந்த சில நாட்களுக்கு முன்பு இடமாற்றம் செய்யப்பட்டார். இதையறிந்த மாணவ-மாணவிகள் ஆசிரியர் பகவானை சூழ்ந்து கொண்டு கண்ணீர் விட்டு அழுதனர். இந்த காட்சி சமூக வலைதளங்களில் வெளியாகி அனைவரையும் நெகிழ செய்தது, குறிப்பிடத்தக்கது. 

Next Story

மேலும் செய்திகள்