தபால் துறை அலட்சியம் - மருத்துவர் கனவு தகர்ப்பு

சிவகங்கை அருகே தபால் துறையின் அலட்சியத்தால் மருத்துவராகும் கனவு தகர்ந்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது
தபால் துறை அலட்சியம் - மருத்துவர் கனவு தகர்ப்பு
x
காஞ்சிரங்கால் கிராமத்தை பாண்டிசெல்வம், ஜோதி  தம்பதியினரின் மகன் வசந்த். இந்த மாணவர் பன்னிரண்டாம் வகுப்பு தேர்வில் 1,125 மதிப்பெண்ணும் நீட் தேர்வில் 384 மதிப்பெண்ணும் பெற்று மருத்துவ படிப்பிற்கு விண்ணப்பித்து இருந்தார். விரைவு தபால் மூலம் ஜூன் 14 ஆம் தேதி அனுப்பப்பட்ட விண்ணப்பம் தபால் துறையின் அலட்சியத்தால் ஜூன் 23 ஆம் தேதி சென்னையில் உள்ள மருத்துவக் கல்வி இயக்குநரிடம் சென்றடைந்துள்ளது. இந்த தாமதம் காரணமாக, அந்த மாணவரின் மருத்துவ கனவு தகர்க்கப்பட்டுள்ளது. இந்நிலையில், மாணவரின் மருத்துவ கனவிற்கு அரசு உதவ வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.

Next Story

மேலும் செய்திகள்