இந்திய தேசமே மிகப்பெரிய சிறையில் அடைக்கப்பட்டது - பிரதமர் மோடி

ஒரு குடும்பத்தின் அதிகாரத்திற்காக, அவசர நிலை காலத்தில், இந்திய தேசமே மிகப்பெரிய சிறையில் அடைக்கப்பட்டதாக பிரதமர் மோடி காங்கிரஸ் கட்சியை கடுமையாக விமர்சித்தார்.
இந்திய தேசமே மிகப்பெரிய சிறையில் அடைக்கப்பட்டது - பிரதமர் மோடி
x
மும்பையில் பாஜக செயல்வீரர்கள் கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, அவசரநிலை கொண்டு வந்த காங்கிரஸ் கட்சியை கடுமையாக தாக்கி பேசினார். அரசியலமைப்பை காங்கிரஸ் கட்சி தவறாக பயன்படுத்தி, அவசர நிலையை கொண்டு வந்ததாக குற்றம்சாட்டினார். ஒரு குடும்பத்தின் அதிகாரத்திற்காக இந்திய தேசமே மிகப்பெரிய சிறையில் அடைக்கப்பட்டது எனவும் பிரதமர் விமர்சித்தார். அவசர நிலையின் போது நாட்டின் ஒவ்வொரு குடிமகனும் அச்சத்துடன் வாழ்ந்ததாக அவர் குறிப்பிட்டார். அவசர நிலையின்போது என்ன நடந்தது என்பதை இளைஞர்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகவே கருப்பு தினம் கடைபிடிக்கப்படுவதாகவும், காங்கிரஸை விமர்சிக்க அல்ல எனவும் பிரதமர் மோடி விளக்கமளித்தார். 


Next Story

மேலும் செய்திகள்