அச்சத்தைப் போக்க சுடுகாட்டில் இரவு தூங்கிய எம்.எல்.ஏ.

சுடுகாட்டில் பேய், பிசாசுகள் உலவுவதாக அச்சம் பாதியில் நின்று போன புனரமைப்பு பணி
அச்சத்தைப் போக்க சுடுகாட்டில் இரவு தூங்கிய எம்.எல்.ஏ.
x
ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டம் பால கொள்ளு தொகுதி எம்.எல்.ஏ.வாக இருப்பவர் ராமா நாயுடு. இவர் தெலுங்கு தேசம் கட்சியை சேர்ந்தவர். இவரது தொகுதியில் பல ஆண்டுகளாக பயன்படுத்தப்படாமல் இருந்த சுடுகாட்டை சீரமைக்க 3 கோடி ரூபாய் நிதியை அம்மாநில அரசு ஒதுக்கீடு செய்தது. ஆனால், பேய், பிசாசுகள் உலவுவதாக பீதி ஏற்பட்டதை தொடர்ந்து, சுடுகாட்டை சீரமைக்கும் பணியை ஊழியர்கள் கைவிட்டனர். 


இதைதொடர்ந்து தொழிலாளர்களின் அச்சத்தைப் போக்க முடிவு செய்த ராமா நாயுடு, இரவில் சுடுகாட்டிற்கு சென்று, படுத்து உறங்கி மறுநாள் காலையில்தான் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார். எம்.எல்.ஏ.வின் இந்த நடவடிக்கைக்கு பிறகு தங்களது அச்சம் நீங்கிவிட்டதாகவும், சுடுகாடு சீரமைப்பு பணியை விரைந்து முடிக்க போவதாகவும் தொழிலாளர்கள் தெரிவித்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்