ராணுவ தளபதி மனைவி கொலை, மற்றொரு ராணுவ தளபதி கைது

டெல்லியில், சக ராணுவ அதிகாரியின் மனைவியை கொலை செய்ததாக, நிகில் ஹண்டா என்ற அதிகாரி கைது செய்யப்பட்டுள்ளளார்.
ராணுவ தளபதி மனைவி கொலை, மற்றொரு ராணுவ தளபதி கைது
x
டெல்லி கன்டோன்மெண்ட் எல்லைக்குட்பட்ட பிரார் சதுக்கம் சாலையில், நேற்று முன்தினம் கழுத்து அறுபட்ட நிலையில் ஒரு பெண்ணின் உடலை போலீசார் கண்டெடுத்தனர். இந்த மர்ம கொலை தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையில் கொல்லப்பட்டவர், சுமார் 35 வயது மதிக்கத்தக்க சைலஜா திவேதி என்பதும், ராணுவத்தில் மேஜர் ஆக பணியாற்றி வரும் அமித் திவேதியின் மனைவி என்பதும் தெரியவந்தது. இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த டெல்லி போலீசார், கொலையாளியை தீவிரமாக தேடி வந்தனர். இந்நிலையில், ராணுவ மேஜரின் மனைவி கொலை வழக்கில் நிகில் ஹண்டா என்ற சக ராணுவ மேஜர் உத்தரப்பிரதேச மாநிலம் மீரட் நகரில் கைது செய்யப்பட்டுள்ளார். தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு சைலஜாவை கேட்ட போது மறுத்துவிட்டதால், நிகில், சைலஜாவை காரில் வைத்து கொலை செய்ததாக கூறப்படுகிறது. டெல்லியில், சக ராணுவ அதிகாரியின் மனைவியை கொலை செய்ததாக, நிகில் ஹண்டா என்ற அதிகாரி கைது செய்யப்பட்டுள்ளளார்.


Next Story

மேலும் செய்திகள்