புதிய பாடத்திட்டத்தில், கி.மு. - கி.பி. என்ற வார்த்தைகள் நீக்கம்

புதிய பாடத்திட்டத்தில், கி.மு. - கி.பி. என்ற வார்த்தைகள் நீக்கப்பட்டு, வேறு வார்த்தைகள் பயன்படுத்தப்பட்டுள்ளதால் சர்ச்சை எழுந்துள்ளது.
புதிய பாடத்திட்டத்தில், கி.மு. - கி.பி. என்ற வார்த்தைகள் நீக்கம்
x
தமிழக அரசால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள புதிய பாடப் புத்தகங்களில் கிறிஸ்து பிறப்பதற்கு முன்பு என்பதைக் குறிக்கும் கி.மு. என்ற வார்த்தையும், கிறிஸ்து பிறந்த பின்னர் என்பதைக் குறிக்கும், கி.பி. என்ற வார்த்தையும் இடம் பெறவில்லை. இதற்குப் பதிலாக, ''பொது ஆண்டுக்குப் பின்'' - ''பொது ஆண்டுக்கு முன்'' என்ற வார்த்தைகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. 

இது தவிர, தமிழ்ப் பாட புத்தகங்களில் சமயம் சார்ந்த பாடல்கள் இடம் பெறும் நிலையில், இந்து மற்றும் முஸ்லீம் மதம் சார்ந்த பாடல்கள் மட்டுமே இடம் பெற்றிருப்பதாகவும் கிறிஸ்துவ மதம் சார்ந்த பாடல் இடம் பெறவில்லை என்றும் சர்ச்சை எழுந்துள்ளது.



Next Story

மேலும் செய்திகள்