மருத்துவ மாணவர் சேர்க்கை கலந்தாய்வில் ஆதார் கட்டாயம் - சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

மருத்துவ மாணவர் சேர்க்கை கலந்தாய்வில், ஆதார் அட்டையை கட்டாயமாக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மருத்துவ மாணவர் சேர்க்கை கலந்தாய்வில் ஆதார் கட்டாயம் - சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு
x
தமிழகத்தில், மருத்துவ மாணவர் சேர்க்கையில் பிற மாநிலத்தவர்களுக்கு அதிக இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாகக் கூறி, ஏழு பேர், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர்.  

வழக்கை விசாரித்த நீதிபதி கிருபாகரன், தமிழகத்தில் எம்.பி.பி.எஸ். சேர்க்கை பெற்ற மாணவர்கள், வேறு மாநிலங்களில் மருத்துவ படிப்புக்கு விண்ணப்பித்துள்ளனரா என கண்டறிந்து அறிக்கை அளிக்கும்படி மத்திய அரசுக்கு உத்தரவிட்டிருந்தார்.

இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, அனைத்து மாநிலங்களில் ஆய்வு செய்வது கடினம் என்பதால், தென் மாநிலங்களில் மட்டும் ஆய்வு செய்து அறிக்கை அளிப்பதாக மத்திய அரசு சார்பில் பதில் அளிக்கப்பட்டது.

இதையடுத்து, இந்த ஆண்டு மருத்துவ மாணவர் சேர்க்கை கலந்தாய்வில் ஆதார் அட்டை காண்பிக்கப்படவேண்டும் என்று உத்தரவிட்ட நீதிபதி, விசாரணையை இரண்டு வாரங்களுக்கு  ஒத்தி வைத்தார்.

Next Story

மேலும் செய்திகள்