"நீட் தேர்வு மையங்கள் அந்தந்த மாவட்டங்களிலேயே அமைக்கப்படும்"- மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தகவல்

நீட் தேர்வு மையங்கள் அந்தந்த மாவட்டங்களிலேயே அமைக்கப்படும் என மத்திய மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார்.
நீட் தேர்வு மையங்கள் அந்தந்த மாவட்டங்களிலேயே அமைக்கப்படும்- மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தகவல்
x
சென்னை ஐ.ஐ.டி வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், 
மாணவர்கள், ஆசிரியர்கள், தொழில்நுட்ப வல்லுநர்களால் பரிந்துரைக்கப்பட்ட 200 திட்டங்களுக்கு மத்திய அரசு 600 கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளதாக கூறிய அவர், அதில் இந்த ஆண்டு மேலும் 200 திட்டங்கள் தேர்ந்தெடுக்கப்படும் என்றார். நீட் தேர்வு கேள்விகளில் தவறுகள் ஏற்படுவதை தவிர்க்க தமிழக அரசிடம் நல்ல மொழிபெயர்ப்பாளர்களை கேட்டிருப்பதாக கூறினார். வேறு மாநிலங்களில் தமிழக மாணவர்கள் நீட் தேர்வு எழுதும் நிலை ஏற்படாது என்றும், நீட் தேர்வு மையங்கள் அந்தந்த மாவட்டங்களிலேயே அமைக்கப்படும் என்றும் அமைச்சர் ஜவடேகர் தெரிவித்தார்.   மற்ற மாநிலங்களைப் போல தமிழகத்திலும் கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் கூடுதலாக தொடங்கப்படும் என அவர் தெரிவித்தார். 


Next Story

மேலும் செய்திகள்