தமிழக மாணவருக்கு போபாலில் தேர்வு மையம் - தமிழகத்திலே மாற்றி தர மாணவர் கோரிக்கை

தமிழக மாணவருக்கு போபாலில் தேர்வு மையம் - தமிழகத்திலே மாற்றி தர மாணவர் கோரிக்கை
தமிழக மாணவருக்கு போபாலில் தேர்வு மையம் - தமிழகத்திலே மாற்றி தர மாணவர் கோரிக்கை
x
ஈரோடு மாவட்டம் பவானி அருகே உள்ள கவுந்தம்பாடி, கவுண்டம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் நவநீதன். மேல்நிலை வகுப்பில் ஆயிரத்து 146 மதிப்பெண்கள் பெற்ற நவநீதன் இந்திய விவசாய ஆராய்ச்சி கழகத்தில் சேர்ந்து படிக்க நுழைவு தேர்வுக்கு விண்ணப்பித்திருந்தார். இந்நிலையில் மத்திய பிரதேச மாநிலம் போபாலில் தேர்வு மையம் ஒதுக்கப்பட்டுள்ளதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். தேர்வு எழுத 2 நாட்களே உள்ள நிலையில், வேறு மாநிலம் சென்று தேர்வு எழுத முடியாது என்பதால் தமிழகத்திலே இடம் ஒதுக்க நவநீதன் கோரிக்கை விடுத்துள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்