ஆட்டம், கொண்டாட்டம் - களை கட்டிய "அம்பு பச்சி மேளா"

அதிசயம், ஆச்சரியம் மிகுந்த அசாம் மாநிலத்தில் உள்ள பழமை வாய்ந்த காமாக்கியா கோயிலில், சாதுக்கள் சங்கமித்த "அம்பு பச்சி மேளா" களை கட்டியுள்ளது.
ஆட்டம், கொண்டாட்டம் - களை கட்டிய அம்பு பச்சி மேளா
x
அசாம் மாநிலத்தில் உள்ள காமாக்கியா தேவி கோயில், 51 சக்தி பீடங்களில் முதல் தளமாகும். அம்மனின் சக்தி பீடங்களில் இது, காம கிரி பீடமாக அழைக்கப்படுகிறது. சக்தியின் உடல் 51 பாகங்களாக சிதறுண்டு விழுந்த போது, இந்த இடத்தில் யோனி விழுந்ததாகவும் கூறப்படுகிறது. 

கவுகாத்தி நகரின் மேற்குப் பகுதியில்,  12 கி.மீ. தொலைவில் நீலாச்சல் மலையில் இந்த கோயில் அமைந்துள்ளது. கடல் மட்டத்திலிருந்து 700 அடி உயரத்தில் உள்ள இந்த கோயிலில், உருவ வழிபாடு கிடையாது. கருவறையில் சிறிய மலைப்பாறை போல், மேடை அமைக்கப்பட்டுள்ளது. இதை மேரு வடிவம் என்கிறார்கள். இது, பார்ப்பதற்கு பெண்ணின் யோனி அமைப்பைப் பெற்றுள்ளது. இதையே சக்தியின் யோனி என்று பக்தர்கள் வழிபடுகின்றனர். 
 
ஆஷாட மாதம் என்னும், ஆனி மாதத்தில், 3 நாட்கள் இங்குள்ள ஊற்றில் இருந்து சிவப்பு நிறத்தில் நீர்  வெளிவருவது அதிசயமாக கருதப்படுகிறது. அந்த நாட்களில் காமாக்கியா தேவி, மாத விலக்காவதாக கருதி, கோவில் கதவுகளை அடைத்துவிடுகின்றனர். கோயிலைச் சுற்றி  துறவிகள், சாதுக்கள் ஒன்று கூடி வழிபாடு நடத்துகின்றனர். 3 நாட்களுக்குப் பிறகு  கதவுகள் திறக்கப்பட்டு சிறப்பான விழா நடைபெறுகிறது. 

பொதுவாக ஆண்டுதோறும், ஜூன் 21 அல்லது 22ஆம் தேதிகளில் இந்த விழா நடைபெறுகிறது. இதனை அம்புபச்சி மேளா என்றழைக்கின்றனர். ஆஷாட மாதம் தான், வளமையையும், செழுமையையும், மகிழ்ச்சியையும் தரவல்ல காலம் என்றும் விவசாயத்தின் ஆரம்பக் காலமும், நிறைவுக் காலமும் இது தான் என்றும் கூறப்படுகிறது.  லட்சக்கணக்கான பக்தர்கள், கோயிலில் குவிந்துள்ளனர். 

Next Story

மேலும் செய்திகள்