பொறியியல் படிப்புக்கு, 1.59 லட்சம் பேர் விண்ணப்பம் - அடுத்த வாரம் தரவரிசை பட்டியல் வெளியீடு
பொறியியல் படிப்புக்கு விண்ணப்பித்துள்ள ஒரு லட்சத்து 59 ஆயிரம் மாணவர்களுக்கு, அடுத்த வாரம் தர வரிசை பட்டியல் வெளியிடப்பட உள்ளது.
பொறியியல் படிப்புக்கு இந்த ஆண்டு, ஒரு லட்சத்து 59 ஆயிரத்து 631 மாணவ, மாணவிகள் விண்ணப்பித்துள்ளனர். இவர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு முடிந்த நிலையில், தர வரிசை பட்டியல் தயாரிக்கும் பணி, அண்ணா பல்கலைக்கழகத்தில் மும்முரமாக நடந்து வருகிறது.
இப்பணிகள் முடிந்ததும், அடுத்த வாரம் தரவரிசை பட்டியல் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனைத் தொடர்ந்து, ஆன்லைன் வழியில் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வும் துவங்குகிறது. ஜூலை 1ம் தேதி முதல் மருத்துவ படிப்பு சேர்க்கைக்கான கலந்தாய்வு துவங்குகிறது. பொறியியல் படிப்பிற்கு விண்ணப்பித்துள்ள பல மாணவர்கள், மருத்துவ படிப்பிற்கும் விண்ணப்பித்துள்ளனர்.
எனவே, முதல்கட்ட மருத்துவ படிப்பு கலந்தாய்வு முடிந்தபின், பொறியியல் சேர்க்கைக்கான கலந்தாய்வை துவக்க அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.
Next Story