மத்திய அரசின் தலைமை பொருளாதார ஆலோசகர் ராஜினாமா

மத்திய அரசின் தலைமை பொருளாதார ஆலோசகர் ராஜினாமா
மத்திய அரசின் தலைமை பொருளாதார ஆலோசகர் ராஜினாமா
x
கடந்த 2014ம் ஆண்டு அக்டோபர் மாதம், மத்திய அரசின் தலைமை பொருளாதார ஆலோசகராக பதவியேற்ற அரவிந்த் சுப்பிரமணியன்,  சொந்த 
காரணங்களுக்காக, தனது பணியை ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார்.  இது குறித்து மத்திய நிதி அமைச்சரிடம் சில நாட்களுக்கு முன் பேசிய அவர், வேலையை ராஜினாமா செய்து விட்டு, மீண்டும் அமெரிக்கா செல்ல இருப்பதாக கூறியுள்ளார். இது குறித்து தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ள நிதி அமைச்சர் அருண் ஜெட்லி, சொந்த காரணங்களுக்காக ராஜினாமா செய்வதால், ராஜினாமாவை ஏற்கொள்வதை தவிர எதுவும் செய்ய முடியாத நிலையில் இருப்பதாக தெரிவித்துள்ளார். இந்நிலையில், செய்தியாளர்களை சந்தித்த அர்விந்த் சுப்பிரமணியன்,   இந்த பணியில் இருந்து, எப்போது  விலகுகிறேன் என்பது குறித்து  இன்னும் முடிவு செய்யவில்லை என்று தெரிவித்துள்ளார்.  

Next Story

மேலும் செய்திகள்