அமர்நாத் யாத்திரை, ஜூன் 28 ம் தேதி தொடக்கம்
பதிவு : ஜூன் 18, 2018, 12:59 PM
அமர்நாத் யாத்திரை, ஜூன் 28 ம் தேதி தொடக்கம்
5 ஆயிரம் ஆண்டு பழமையான குடவரை கோயிலான, அமர்நாத் ஆலாயம், காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகரில் இருக்கிறது. இங்கு பனி லிங்கம் வடிவில் சிவ பெருமான் காட்சியளிக்கிறார். மே முதல் ஆகஸ்ட் மாதம் வரை பனி லிங்கம் உருவாகும். 

இந்து சமய புராணங்களின் கூற்றுப்படி,  இங்குதான் சிவ பெருமான் தனது வாழ்க்கை ரகசியங்களை பார்வதிக்கு கூறியதாக சொல்லப்படுகிறது. கடல் மட்டத்தில் இருந்து சுமார் 4 ஆயிரம் மீட்டர் உயரத்தில் உள்ள இந்த கோவிலுக்கு எளிதில் செல்ல முடியாது. 

ஆண்டுதோறும் ஜூன் மாதம் தொடங்கி 60 நாட்கள் வரை பக்தர்கள் செல்ல அனுமதி அளிக்கப்படுகிறது. இந்த ஆண்டுக்கான முன் பதிவு கடந்த மார்ச் 1ம் தேதி தொடங்கியது. இதுவரை 2 லட்சம் பேர் பதிவு செய்துள்ளனர். 

வருகிற 28 ந் தேதி தொடங்க உள்ள அமர்நாத் யாத்திரை ஆகஸ்ட் 26 ந் தேதியுடன் நிறைவடையும். அதுவரை, தினமும் 7 ஆயிரத்து 500 பக்தர்கள் வீதம் அனுமதிக்கப்படுவார்கள். செல்லும் வழி நெடுகிலும், தீவிரவாதிகள் அபாயம் இருப்பதால் ராணுவ வீரர்களின் பலத்த பாதுகாப்பு உண்டு.  

ஆபத்து நிறைந்த இந்த யாத்திரையில் இஸ்லாமியர்களும் பங்கேற்கின்றனர். பனி லிங்க வடிவில் சிவபெருமான் காட்சி தருவதாக முதன் முதலில் பார்த்து சொன்னதே, ஒரு இஸ்லாமியர்' என்றும் கூறப்படுகிறது.


ஸ்ரீநகரில் இருந்து பாகல் காவ் வரை வாகனத்தில் சென்று, அங்கிருந்து நடைபயணமாக புறப்பட வேண்டும். வழியில் சந்தன்வாடியில் தங்கிச் செல்ல வேண்டும். மலை மீது ஏறும்போது மூச்சுத் திணறல் ஏற்படலாம் என்பதால்  மருத்துவ குழுவும் தயாராக இருக்கும். 

வாழ் நாளில் ஒரு முறையாவது அமர்நாத் யாத்திரை செல்ல வேண்டும் என்பது இந்துக்களின் மிகப்பெரிய விருப்பம். இந்த ஆண்டும், 'ஹர ஹர மகாதேவ்', `ஜெய் போலேநாத்'  என்ற கோஷங்களுடன் யாத்திரையை எதிர் நோக்கி காத்திருக்கின்றனர், அமர்நாத் பக்தர்கள்.

தொடர்புடைய செய்திகள்

இந்தியா- மே.இந்திய தீவுகள் இடையே 3வது டி20 போட்டி -சேப்பாக்கத்தில் டிக்கெட் விற்பனை தொடங்கியது

இந்தியா, மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான கடைசி டுவென்டி டுவென்டி கிரிக்கெட் போட்டி, சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் வரும் 11ஆம் தேதி நடக்கிறது.

500 views

இந்தியாவிற்கு வரும் அமெரிக்க சுற்றுலா பயணிகள் அதிகரிப்பு

இந்தியாவிற்கு வரும் அமெரிக்க சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரித்து வருவதாக சுற்றுலா அமைச்சகம் தெரிவித்துள்ளது.

190 views

ஆசிய போட்டி : டென்னிஸ் ஆடவர் இரட்டையர் பிரிவில் இந்தியாவுக்கு பதக்கம் உறுதி

ஆசிய போட்டி டென்னிஸ் ஆடவர் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் போபண்ணா ஜோடி இறுதிச் சுற்றுக்கு முன்னேறி பதக்கத்தை உறுதி செய்தது.

271 views

இங்கிலாந்துக்கு எதிரான முதல் டி-20 போட்டி - 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி

இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டி-20 போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றுள்ளது.

3042 views

பிற செய்திகள்

ஒடிசா : ஆற்றுப்பாலத்தில் இருந்து பேருந்து கவிழ்ந்து விபத்து

ஒடிசா மாநிலம், கட்டாக் மாவட்டத்தில் பயணிகள் பேருந்து ஒன்று, ஜகத்பூர் அருகே மகாநதி ஆற்றுப்பாலத்தில் இருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 12 பேர் உயிரிழந்தனர். 46 பேர் படுகாயம் அடைந்தனர்.

31 views

5 மாநில சட்டப்பேரவை தேர்தல் : ஆட்சியை கைப்பற்ற போவது யார்?

சத்தீஷ்கர் உள்ளிட்ட 5 மாநில சட்டப்பேரவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை டிசம்பர் 11-ம் தேதி நடைபெறுகிறது.

1241 views

"தமிழக மக்களுக்கு கேரளா துணை நிற்கும்" - கேரளா முதலமைச்சர் பினராயி விஜயன் தகவல்

கஜா புயலால் பாதிக்கப்பட்ட தமிழக மக்களுக்கு கேரள அரசு துணை நிற்கும் என அம்மாநில முதலமைச்சர் பிணராயி விஜயன் தெரிவித்துள்ளார்.

194 views

வங்கி கணக்கிலிருந்து பணம் பறிக்கும் மோசடி : கூகுள் மேப்பை பயன்படுத்தும் மோசடி நபர்கள்

கூகுள் மேப்பில் உள்ள போலி மொபைல் எண்களை பயன்படுத்தி வங்கி வாடிக்கையாளர்களிடமிருந்து பணம் பறிக்கும் மோசடி அரங்கேறியுள்ளது.

30 views

அரவிந்த் கெஜ்ரிவால் மீது மிளகாய்ப் பொடி வீச்சு

டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் மீது மிளகாய் பொடி வீசப்பட்டது. டெல்லி மாநில தலைமைச் செயலக வளாகத்துக்குள்ளேயே இந்த சம்பவம் நடைபெற்றது.

377 views

சத்தீஸ்கர் சட்டப்பேரவை இரண்டாம் கட்ட தேர்தல் : மாலை 5 மணி வரை 64.80% வாக்குகள் பதிவு

சத்தீஸ்கரில் இரண்டாம் கட்ட தேர்தலில், 5 மணி வரை 64 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளன.

23 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.