லாரி உரிமையாளர்கள் இன்று முதல் வேலை நிறுத்தம்

லாரி உரிமையாளர்கள் இன்று முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளதால், அத்தியாவசிய பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உருவாகியுள்ளது.
லாரி உரிமையாளர்கள் இன்று முதல் வேலை நிறுத்தம்
x
லாரி உரிமையாளர்கள் இன்று முதல் வேலை நிறுத்தம்

லாரி உரிமையாளர்கள் இன்று முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளதால், அத்தியாவசிய பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உருவாகியுள்ளது. 

டீசல் விலை உயர்வு, சுங்கச்சாவடி கட்டண உயர்வு, காப்பீடு தொகை உயர்வு, போன்றவற்றை கண்டித்து இன்று காலை 6 மணி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவதாக லாரி உரிமையாளர்கள் அறிவித்துள்ளனர். 

இது தொடர்பாக,  அகில இந்திய தரைவழி போக்குவரத்து வாகன உரிமையாளர் சங்க பொதுச் செயலாளர் ராஜேந்திர சிங் மற்றும் தமிழ்நாடு லாரி உரிமையாளர் சங்க தலைவர் சுகுமார் ஆகியோர் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தனர். 

அப்போது,  நாடு முழுவதும்  75 லட்சம்  வாகனங்கள் ஓடாது  எனவும் தமிழகத்தில் மட்டும்  5 லட்சம் லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்தத்தில் பங்கேற்பதாகவும் அவர்கள் தெரிவித்தனர். வெளிமாநிலங்கள் மற்றும் பிற மாவட்டங்களுக்கு சென்ற லாரிகள் ஆங்காங்கே நிறுத்தப்படும் எனவும் இந்த வேலை நிறுத்தத்தால் மத்திய, மாநில அரசுகளுக்கு தினந்தோறும் 60 ஆயிரம் கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்படும் எனவும் அவர்கள் கூறினர்.

மருந்து, பால் மற்றும் தண்ணீர் லாரிகள் மட்டும் இயங்க அனுமதி அளிக்கப் பட்டுள்ளதாக தமிழ்நாடு லாரி உரிமையாளர் சங்கத்தினர் 
தெரிவித்தனர்.







லாரி உரிமையாளர்கள் போராட்டத்தால் மக்களுக்கு பாதிப்பு - தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் 


போராட்டம் அறிவித்துள்ள லாரி உரிமையாளர்களை அழைத்து அரசு பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் வலியுறுத்தி உள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்