சட்டக்கல்லூரி மாணவர்கள் மீது மர்ம நபர்கள் தாக்குதல் - மாணவருக்கு கை துண்டான பரிதாபாம்

சென்னையில் தனியார் சட்டக்கல்லூரி மாணவர்களை மர்ம நபர்கள் கொடூர தாக்குதல் நடத்தியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
சட்டக்கல்லூரி மாணவர்கள் மீது மர்ம நபர்கள் தாக்குதல் - மாணவருக்கு கை துண்டான பரிதாபாம்
x
பூந்தமல்லி தனியார் சட்டக்கல்லூரி மாணவர்களான ஸ்ரீராம்,மனோஜ் ஆகிய இருவரும் ரம்ஜான் பண்டிகைக்காக வடபழனி அருகே உள்ள நண்பரின் இல்லத்துக்கு சென்றுவிட்டு காரில் திரும்பிக்கொண்டிருந்தனர்.  

கோடம்பாக்கம் அருகே அவர்கள்  சென்ற கார், எதிர்பாராவிதமாக ஆட்டோ ஒன்றின் மீது மோதியுள்ளது.

இதில் ஆட்டோ ஓட்டுனருக்கும் மாணவர்களுக்கும் இடையே 
தகராறு ஏற்பட்டுள்ளது. 

இதனையடுத்து 5 பேர் கும்பல் ஆட்டோவில் அவர்களை பின் தொடர்ந்து  சென்றுள்ளனர். 

கோடம்பாக்கம் புலியூர்புரத்தில்,
காருக்கு பெட்ரோல் போடும் போது 5 பேர் கும்பல்  மாணவர்கள் இருவரையும் கத்தி உள்ளிட்ட ஆயுதங்களால் தாக்கியுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்