டிஜிட்டல் இந்தியா பயனாளிகளிடம் காணொலி மூலம் பிரதமர் பேச்சு

தொழில்நுட்ப பலன்கள், கிராமப்புற மக்களையும் சென்றடையும் வகையில் டிஜிட்டல் இந்தியா திட்டத்தை கொண்டு வந்ததாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
டிஜிட்டல் இந்தியா பயனாளிகளிடம் காணொலி மூலம் பிரதமர் பேச்சு
x
டிஜிட்டல் இந்தியா திட்டங்களால் பயன்பெற்றவர்கள் உடன்  காணொலி மூலம் பிரதமர் மோடி நேற்று உரையாடினார். தொழில் நுட்ப உதவியால், தற்போது ஆன்லைன் மூலம் ரயில் டிக்கெட் முன்பதிவு மற்றும் கட்டணங்களை செலுத்தும் எளிய நடைமுறையால் மக்கள் பலனடைந்து வருவதாக அவர் கூறினார்.  தொழில் நுட்ப வளர்ச்சியால் வரும் பயன் ஒரு சில சமூகத்தினர் மட்டும் அனுபவிக்காமல், அனைத்து தரப்பினரும் அந்த பயனை அடைய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக  பிரதமர் தெரிவித்தார். 

Next Story

மேலும் செய்திகள்