2019-ம் ஆண்டுக்கான பொதுத்தேர்வு அட்டவணை வெளியீடு

10, 11, 12 வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு தேதிகள் அறிவிப்பு அமைச்சர் செங்கோட்டையன் வெளியிட்டார்
2019-ம் ஆண்டுக்கான பொதுத்தேர்வு அட்டவணை வெளியீடு
x
பத்து, பதினொன்று மற்றும் பனிரெண்டாம் வகுப்புகளின் பொதுத்தேர்​வு அட்டவணையை, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் வெளியிட்டுள்ளார். 

 
தொடர்ந்து பேசிய அவர், பதினோராம் வகுப்பு பொதுத் தேர்வில், மாணவர்கள் குறைவான மதிப்பெண்கள் எடுத்துள்ளதால், 12ஆம் வகுப்பு தேர்வு மதிப்பெண்களுடன் சேர்க்காமல் இருப்பது குறித்து அரசு பரிசீலனை செய்து வருவதாக அ​மைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார். 

இந்த ஆண்டு அரசு சார்பில் அளிக்கப்பட்ட நீட் தேர்வு பயிற்சி  பெற்றவர்களில், ஆயிரத்து 300 பேர் தேர்ச்சி அடைந்துள்ளதாகவும், இவர்களில் 250 பேருக்கு மருத்துவ இடங்கள் கிடைக்க உள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார். அரசுப்பள்ளி ஆசிரியர்களுக்கு அடுத்த வாரம் புதிய பாடத்திட்டத்திற்கான பயிற்சி வழங்கப்படும் என்றும் அமைச்சர் செங்கோட்டையன் கூறினார். 

இந்த ஆண்டு 3 ஆயிரம் அரசுப்பள்ளிகளிலும், அடுத்த ஆண்டு 2 ஆயித்து 200 பள்ளிகள் என மொத்தம் 5 ஆயிரத்து 200 பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்புகள் தொடங்கப்படும் என்றும், அமைச்சர் செங்கோட்டையன் உறுதியளித்தார். 


Next Story

மேலும் செய்திகள்