ரயில் பயணிகளின் குறைகளை தீர்க்க புதிய செயலி அறிமுகம்

"ரயில் மதத்" மற்றும் "மெனு ஆன் ரயில்ஸ்" ஆகிய இரண்டு புதிய செயலிகளை இந்திய ரயில்வே அறிமுகப்படுத்தியுள்ளது
ரயில் பயணிகளின் குறைகளை தீர்க்க புதிய செயலி அறிமுகம்
x
* "மெனு ஆன் ரயில்ஸ்" என்ற செயலியில் ரயில்களில் வழங்கப்படும் அனைத்து வகையான உணவு விவரங்கள் இடம்பெற்றுள்ளன.

* ஒருங்கிணைந்த உணவு தொகுப்பின்கீழ், காலை சிற்றுண்டி, மதிய சிற்றுண்டி, மதிய உணவு, அசைவ உணவு, ஜெயின் உணவு, இனிப்பு வகைகள், சர்க்கரை நோயாளிகளுக்கான உணவு போன்ற 96 வகையான உணவு பொருட்கள் உள்ளன.

* தங்களுக்கான உணவு பொருட்களை முன்கூட்டியே பதிவு செய்திருந்தால், என்னென்ன உணவு பொருட்கள் வழங்கப்படுகிறது. அவற்றின் அளவு எவ்வளவு போன்ற விவரங்களும் இந்த செயலியின் மூலம் ரயில் பயணிகள் தெரிந்து கொள்ளலாம்.

* ரயில்களில் உணவு பொருட்களுக்கு கூடுதல் விலை வசூலிப்பதைத் தடுக்கவும் உணவு பொருட்கள் மற்றும்.

* விலை பற்றி ரயில் பயணிகள் இடையே விழிப்புணர்வு ஏற்படுத்தவும் இந்த செயலி உதவும் என்று ரயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளது.

* அதேபோல் பயணிகள் குறைதீர்ப்பை துரிதப்படுத்தவும், முறைப்படுத்தவும் " ரயில் மதத்" செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

* இந்த செயலி மூலம் பயணிகள் புகாரை பதிவு செய்யலாம்.

*  அதேபோல் புகாரின் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்தும் பயணிகளுக்கு எஸ்.எம்.எஸ் மூலம் அனுப்பி வைக்கப்படும்.

* பாதுகாப்பு, குழந்தைகளுக்கான உதவி உள்ளிட்ட பல்வேறு உதவிக்கான தொலைபேசி எண்களும் இந்த செயலியில் இடம் பெற்றுள்ளன.

* எளிதான முறையில் உடனடி உதவிக்கு இந்த எண்களில் நேரடியாக தொடர்பு கொள்ளவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்