நேற்றுவரை சுமை தூக்கும் தொழிலாளி... நாளை அரசு பணியாளர்

திறமையை வைத்து வறுமையை வென்று சிவில் சர்வீசஸ் தேர்வில் தேர்ச்சி பெற்ற சுமை தூக்கும் தொழிலாளி ஸ்ரீநாத்தை கூகுல் சி.இ.ஓ சுந்தர் பிச்சை பாராட்டியுள்ளார்.
நேற்றுவரை சுமை தூக்கும் தொழிலாளி... நாளை அரசு பணியாளர்
x
சிவில் சர்வீசஸ் தேர்வு... பல ஆயிரம் பணம் கட்டி கோச்சிங் சென்டரில் சேர்ந்து,  இரவு பகல் பாராமல் பல மணி நேரம் ஒதுக்கி படித்தால் மட்டுமே வெற்றி பெற முடியும். அந்த அளவிற்கு கடினமான தேர்வு என்கின்றனர், சிவில் சர்வீஸ் தேர்வுக்கு தயாராகிவரும் மாணவர்கள்....திறமை இருந்தால் பணம், படிப்பதற்கு நேரம் என எதுவும் தேவையில்லை என நிரூபித்துள்ளார் கொச்சின் ரயில் நிலையத்தில் சுமை தூக்கும் தொழிலாளியான ஸ்ரீநாத்...

பன்னிரண்டாம் வகுப்பு வரை மட்டுமே படித்திருந்த ஸ்ரீநாத் வறுமையால், கொச்சின் ரயில் நிலையத்தில் சுமை தூக்கும் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். கோச்சிங் சென்டரில் சேரும் அளவிற்கு ஸ்ரீநாத்திடம் பணம் இல்லை... சுமை தூக்கினால் தான் உணவு என்பதால், படிப்பதற்கு நேரமும் கிடைக்கவில்லை. ஆனால், அவருடைய திறமை, அவரின் வறுமையை தாண்டி வெற்றி பெற்றுள்ளது.  

அரசு வேலை  பெறுவதில் அதீத ஆர்வம் கொண்டிருந்த ஸ்ரீநாத், KPSC என்ற தேர்வை மூன்று முறை எழுதியுள்ளார். ஆனால் அவருக்கு தோல்வி தான் கிடைத்தது. இந்நிலையில், அவருக்கு வரப்பிரசாதமாக கிடைத்தது இந்தியன் ரயில்வேயின் இலவச Wifi வசதி... 

இந்தியன் ரயில்வே கூகுல் நிறுவனத்தோடு இணைந்து ரயில் நிலையங்களில், இலவச Wifi வசதி கொண்டுவந்தது. இதனை சரியாக பயன்படுத்தி கொண்டார் ஸ்ரீநாத்... வைபை உதவியுடன் பாடங்களை பதிவிறக்கம் செய்து ஆடியோவாக கேட்டுகொண்டே சுமை தூக்கும் தொழிலில் ஈடுபட்டார் ஸ்ரீநாத்...

ஓய்வு நேரங்களிலும் Wifi வசதி மூலம் பழைய வினாத்தாள்களை பதிவிறக்கம் செய்து படித்துவந்துள்ளார். அவரின் விடா முயற்சிக்கு வெற்றியும் கிடைத்துள்ளது. சமீபத்தில் கேரள அரசுபணியாளர் தேர்வாணையம் வெளியிட்ட சிவில் தேர்வு முடிவுகளில், ஸ்ரீநாத்தின் பெயரும் இடம் பெற்றுள்ளது. நேர்முக தேர்வில் அவர் வெற்றி பெறும் பட்சத்தில், அவர் தனது லட்சியமான அரசு பணியை அடைந்து விடுவார். 

இந்நிலையில் ஸ்ரீநாத்திற்கு வாழ்த்து தெரிவித்த கூகுல் நிறுவனத்தின் சி.இ.ஓ. சுந்தர் பிச்சை, இந்த செய்தியை கேட்பதற்கே இனிமையாக உள்ளதாகவும், இந்தியன் ரெயில்வேயுடன் ஒப்பந்தம் செய்துகொண்டதற்கு பெருமை அடைவதாகவும் தெரிவித்துள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்