10-ம் வகுப்பு கூட தேர்ச்சி பெறாத மணமகன்

10-ம் வகுப்பு கூட தேர்ச்சி பெறாத மணமகன் பட்ட படிப்பு முடித்து விட்டதாக பொய் கூறி திருமண முயற்சி ஏமாற்றப்பட்டதை அறிந்து திருமணத்தை நிறுத்திய மணப்பெண் பெண் வீட்டாரிடம் 50 லட்சம் கேட்டு மிரட்டிய மணமகன் புகைப்படங்களை வெளியிடுவதாக கூறி மிரட்டல்
10-ம் வகுப்பு கூட தேர்ச்சி பெறாத மணமகன்
x
சென்னை ராயபுரத்தை சேர்ந்த ஹோட்டல் அதிபர் சையது இப்ராஹிம் ஷா என்பவரது மகள் சோபியா பர்வீனுக்கும் இளையான்குடியை சேர்ந்த முகமது அஸ்ஸாம் என்பவரை திருமணம் பேசியுள்ளனர். முகமது அஸ்ஸாம், தான் எம்.பி.ஏ. படித்துவிட்டு லண்டனில் வேலை பார்த்துவருவதாக கூறியதால், பெண்வீட்டார் திருமணத்திற்கு சம்மதித்துள்ளனர்.

கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு பூ சூடுதல் நிகழ்ச்சியும் நிறைவு பெற்றிருந்த நிலையில், மண மகன் அஸ்ஸாம் மற்றும் அவரது குடும்பத்தினர், திருமணத்திற்கு அவசரபடுத்தியதாக தெரிகிறது. இதனால், மணமகள் சோபியா வீட்டார் சந்தேகம் அடைந்து விசாரித்தபோது, பல அதிர்ச்சி உண்மைகள் வெளிவந்துள்ளன

அதன்படி, அஸ்ஸாம் 10 ஆம் வகுப்பு தேர்ச்சிபெறாமல் கூலி வேலை பார்த்து வருவதும் , பல பெண்களுடன் தொடர்பு உள்ளதாகவும் கூறப்படுகிறது. இதனால், பெண் வீட்டார் திருமணத்தை நிறுத்தியுள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த அஸ்ஸாம், திருமணத்தை நிறுத்தினால் 50 லட்சம் ரூபாய் தர வேண்டும் என நிர்பந்தித்துள்ளார்

அதற்கு பெண்வீட்டார் மறுக்கவே, பணம் தரவில்லை என்றால், பூ வைக்கும் நிகழ்ச்சியில் சோபியாவுடன் சேர்ந்து எடுத்த புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பகிர்ந்து பெண்ணின் வாழ்க்கையை சீரழித்து விடுவேன் எனவும் மிரட்டியுள்ளார் அஸ்ஸாம்.

அதிர்ச்சியடைந்த மணப்பெண்ணின் பெற்றோர், சையது இப்ராஹிம் மற்றும் பர்கத் நிஷா ஆகியோர் ராயபுரம் மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளளனர். புகாரை பெற்றுக்கொண்ட போலீசார், முகமது அஸ்ஸாமை கைது செய்து விசாரித்து வருகின்றனர்


Next Story

மேலும் செய்திகள்