2019ம் ஆண்டில் பிரதமர் ஆவேன் - கர்நாடகாவில் ராகுல் காந்தி பேட்டி

நாடாளுமன்ற தேர்தலில் தனிப்பெரும் கட்சியாக காங்கிரஸ் வெற்றி பெற்றால், தான் பிரதமராவதாக ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்
2019ம் ஆண்டில் பிரதமர் ஆவேன் - கர்நாடகாவில் ராகுல் காந்தி பேட்டி
x
கர்நாடகாவில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டு வரும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, பெங்களூருவில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, 2019ம் ஆண்டு நடைபெறும் நாடாளுமன்ற மக்களவை தேர்தலில் காங்கிரஸ் கட்சி தனிப்பெரும் கட்சியாக வெற்றி பெற்றால் தான் பிரதமராகப் போவதாக தெரிவித்தார். இது குறித்து செய்தியாளர்கள் கேட்டபோது, அவர் இவ்வாறு பதிலளித்தார். 
தொடர்ந்து பேசிய அவர், கர்நாடகாவில் ஊழல் புகாரில் சிறைக்கு சென்றவரை முதலமைச்சர் வேட்பாளராக பா.ஜ.க. அறிவித்துள்ளதாகவும் அது குறித்து பிரதமர் மோடி விளக்கம் அளிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினார். 


Next Story

மேலும் செய்திகள்