வைகை ஆற்றில் இறங்கினார் கள்ளழகர்

பச்சைப்பட்டு உடுத்தி வைகை ஆற்றில் இறங்கினார் கள்ளழகர்..
வைகை ஆற்றில் இறங்கினார் கள்ளழகர்
x
மதுரை சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான அழகர் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சி வெகுவிமரிசையாக நடைபெற்றது. பச்சை பட்டுடுத்தி தங்கக் குதிரை வாகனத்தில் பவனி வந்த அழகரை கைகளில் தீபம் ஏந்தி ஏராளமான பக்தர்கள் வரவேற்றனர். இன்று காலை சுமார் 6 மணியளவில் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கினார். அப்போது பக்தர்கள் எழுப்பிய கோவிந்தா, கோவிந்தா என்ற கோஷம் விண்ணைப் பிளந்தது. ஆற்றில் இறங்கிய அழகர் மீது பக்தர்கள் மலர்களை தூவியும், தண்ணீரை  பீய்ச்சி அடித்தும் பரவசம் அடைந்தனர்.


Next Story

மேலும் செய்திகள்