"20 ஆண்கள்.. 6 அழகிகள்..செக்கப் ரூம்..கழன்ற மேலாடை.. உருவப்பட்ட உள்ளாடை"

x

மிஸ் யுனிவர்ஸ் இந்தோனேசியா போட்டியில் அழகிகளிடம் உடல் பரிசோதனை என்ற பெயரில் அட்டூழியம் அரங்கேறியதை தொடர்ந்து கொதித்தெழுந்த மிஸ் யுனிவர்ஸ் அமைப்பு, சம்பந்தப்பட்ட நிறுவனத்துடனான ஒப்பந்தத்தை ரத்து செய்தது.

அமெரிக்காவின் மிஸ் யுனிவர்ஸ் நிறுவனம் நவம்பர் மாதம் மிஸ் யுனிவர்ஸ் அழகியை தேர்வு செய்யவிருக்கிறது. இந்த போட்டியில் பங்கேற்க பல நாடுகளில் அழகிகள் தேர்வு செய்யப்பட்டு வருகிறார்கள்.

அந்த வகையில் இந்தோனேசியாவில் அழகியை தேர்வு செய்யும் போட்டிகள் இம்மாதம் தொடக்கத்தில் நடந்தது. இந்தோனேசியாவில் பல்வேறு பகுதிகளை சேர்ந்த அழகிகள் இதில் கலந்துக் கொண்டனர்.

அப்போது அழகிகளிடம் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் பாலியல் ரீதியாக தொந்தரவு கொடுத்ததாக புகார்கள் எழுந்துள்ளது. போட்டியில் பங்கேற்க வந்த அழகிகள் 6 பேர் இதுகுறித்து அந்நாட்டு போலீசிலும், மிஸ் யுனிவர்ஸ் அமைப்பிலும் புகார் கொடுத்திருக்கிறார்கள். ''

போட்டி நடந்தபோது உடல் பரிசோதனை என்ற பெயரில் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் உள்ளாடைகளை களைய சொன்னதாகவும், சங்கடம் அளிக்கும் நிலையில் நிற்க சொன்னதாகவும் அழகிகள் புகார் தெரிவித்துள்ளனர்.

ஆண்கள் உட்பட 20 பேர் இருந்த அறையில் தாங்கள் அழைத்து செல்லப்பட்டதாகவும், அங்கு போட்டியாளர்கள் மேலாடை இல்லாமல் நிற்க சொன்னார்கள் எனவும் அப்போது நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் புகைப்படங்களை எடுத்ததாகவும் அழகிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.

உலக அரங்கில் அழகாலும், அறிவாலும் ஜொலிக்க விரும்பியவர்களை அதிர வைத்த தருணம் குறித்த புகார்கள் உலக அளவில் அதிர்வலையை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக விசாரிப்பதாக உள்ளூர் போலீசார் தெரிவித்த நிலையில், மிஸ் யுனிவர்ஸ் அமைப்பு என்ன நடவடிக்கையை எடுக்கும் என்ற கேள்வி எழுந்தது.

விசாரிப்பதாக சொன்ன மிஸ் யுனிவர்ஸ் அமைப்பு,பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்வதே தங்களுடைய முதல் குறிக்கோள் என்றது.

தொடர்ச்சியாக இந்தோனேசியாவில் மிஸ் யுனிவர்ஸ் போட்டியை நடத்த ஒப்பந்தம் செய்திருந்த PT Capella Swastika Karya நிறுவனத்துடனான ஒப்பந்தத்தை ரத்து செய்வதாக மிஸ் யுனிவர்ஸ் அமைப்பு அறிவித்துள்ளது. அந்த நிறுவனமே மலேசியாவில் மிஸ் யுனிவர்ஸ் போட்டியாளர்களை தேர்வு செய்ய ஒப்பந்தம் செய்திருந்தது, இப்போது மலேசியாவில் அழகி தேர்வு மிஸ் யுனிவர்ஸ் நிறுவனம் ரத்து செய்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்