தொழிலதிபரை தொட்ட 2 கேங்ஸ்டர்கள்.. சினிமா பாணியில் நடந்த என்கவுண்டர் - பஞ்சாப் அலற விட்ட பயங்கரம்

x
  • பஞ்சாப் மாநிலத்தில், தொழிலதிபரை கடத்தி பணம் கேட்டு மிரட்டிய 2 கேங்ஸ்டர்களை போலீசார் என்கவுண்டரில் சுட்டுக்கொன்றனர்.
  • பஞ்சாப் மாநிலம் லூதியானாவை சேர்ந்த தொழிலதிபர் சாம்பவ் ஜெயின், கடந்த மாதம் 17-ம் தேதி, 7 பேர் கொண்ட கும்பலால் கடத்தப்பட்டார். அவரது குடும்பத்தினரிடம் கடத்தல் கும்பல் பணம் கேட்டு மிரட்டியது. இதுகுறித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சாம்பவ் ஜெயினை மீட்க நடவடிக்கை மேற்கொண்டனர். இந்நிலையில், சாம்பவ் ஜெயினின் காலில் சுட்டபின் விஸ்வகர்மா சவுக் பகுதியில் அவரை தள்ளிவிட்டு கடத்தல் கும்பல் தப்பியோடியது. இந்நிலையில்,
  • கடத்தலில் தொடர்புடைய கோபி மற்றும் சஞ்சீவ் குமார் ஆகிய இருவரை காவல்துறையினர் என்கவுண்டரில் சுட்டுக்கொன்றனர். இச்சம்பவத்தில் துணை காவல் ஆய்வாளர் சுக்தீப்சிங் காயமடைந்தார். தொழிலதிபர் கடத்தல் வழக்கில், மேலும் 5 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

Next Story

மேலும் செய்திகள்