ஒரே இரவில் 2 நிலநடுக்கம் - பீதியில் மக்கள்

x

அந்தமான் அருகே கடலில் இரண்டு முறை மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. இரவு 10.04க்கு ஏற்பட்ட நிலநடுக்கம், ரிக்டர் அளவில் 4.6 ஆக பதிவானதாக, நிலநடுக்கத்திற்கான தேசிய ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. போர்ட் பிளேரில் இருந்து, 541 கிலோ மீட்டர் தெற்கு தென்கிழக்கு பகுதியில், கடலில் 30 கிலோ மீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதே போன்று, அதிகாலை 2.31 மணியளவில், போர்ட் பிளேரில் இருந்து 505 கிலோமீட்டர் தெற்கு தென்கிழக்கு பகுதியில் 35 கிலோ மீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்