இரவு 11 மணி தலைப்புச் செய்திகள் (03-09-2023)

x

சனாதன கோட்பாடுகளை மட்டுமே நான் விமர்சித்தேன்... சனாதனம் பற்றி நான் பேசியது சரிதான்... அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உறுதி...

வாக்கு வங்கி அரசியலுக்காக 'சனாதன தர்மம்' அவமதிப்பு...சனாதன தர்மத்திற்கு எதிராக அமைச்சர் உதயநிதியின் பேச்சுக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கண்டனம்...

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே ஒரே குடும்பத்தை சேர்ந்த நான்கு பேர் வெட்டிப் படுகொலை... கள்ளகிணறு பகுதியில் நிகழ்ந்த பரபரப்பு சம்பவத்தில், மர்ம கும்பலுக்கு போலீஸார் வலை....

அடுத்த 48 மணி நேரத்திற்குள் வடகிழக்கு வங்கக்கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக கூடும்... சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்...

இந்தியா கூட்டணி நாடாளுமன்ற குழு தலைவர்கள், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கேவுடன் வரும் 5ஆம் தேதி ஆலோசனை.... டெல்லியில் கூட்டம் நடைபெற உள்ளதாக அறிவிப்பு...



Next Story

மேலும் செய்திகள்