இரவு 11 மணி தலைப்புச் செய்திகள் (13-09-2023)

x

இலங்கையில் நெடுந்தீவு கடல் பகுதியில் மீன்பிடித்த ராமேஸ்வரம் மீனவர்கள் 19 பேரை கைது செய்தது, இலங்கை கடற்படை.. மூன்று விசைப்படகையும் சிறைபிடித்ததால் பரபரப்பு...

ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்புப் படை மற்றும் பயங்கரவாதிகள் இடையே கடும் துப்பாக்கி சண்டை... ராணுவ கர்னல் உள்பட 3 பேர் பலி...

டெல்லியில் பாஜக தேர்தல் குழு கூட்டத்தில் பாஜக தலைவர் ஜே பி நட்டா உள்ளிட்டோர் பங்கேற்பு... ஜி 20 உச்சி மாநாட்டை வெற்றிகரமாக நடத்திய பிரதமர் மோடிக்கு பாராட்டு தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றம்...

நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடரை முன்னிட்டு செப்டம்பர் 17ஆம் தேதி அனைத்து கட்சி கூட்டம்... நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரஹலாத் சிங் ஜோஷி அழைப்பு...

இலவச எரிவாயு இணைப்பு வழங்கும் உஜ்வாலா திட்டம் மேலும் 3 ஆண்டுகளுக்கு நீட்டிப்பு... புதிதாக 75 லட்சம் இலவச எரிவாயு இணைப்பு வழங்க மத்திய அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல்...


Next Story

மேலும் செய்திகள்