"யோகி ஆதித்யநாத்தும் நானும் இணைத்து.." - ரஜினி அதிரடி பேட்டி | Yogi Adityanath

x

உத்தரபிரதேச முதலமைச்சர் யோகித் ஆதித்யநாத்துடன் இணைந்து ஜெயிலர் படத்தை பார்க்க உள்ளதாக ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.

VOVT

ஜெயிலர் படம் வெளியானதும், இமயமலைக்கு ஆன்மீக பயணம் மேற்கொண்ட ரஜினிகாந்த், அதனை முடித்துவிட்டு ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சிக்கு சென்றார். அம்மாநில ஆளுநர் சி.பி. ராதாகிருஷ்ணனை சந்தித்த ரஜினிகாந்த், பின்னர் யாகோடா ஆசிரம குரு பரம்ஹம்ச யோகானந்தாவை சந்தித்து ஆசி பெற்றார். இரண்டாவது நாளாக பல்வேறு இடங்களுக்கு சென்ற ரஜினிகாந்த், ராஞ்சி பயணத்தை முடித்துவிட்டு உத்தபிரதேச மாநிலம் லக்னோ சென்றடைந்தார். அங்கு செய்தியாளரை சந்தித்த அவர், உத்தரபிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்தை சந்தித்து அவருடன் ஜெயிலர் படம் பார்க்க உள்ளதாக தெரிவித்தார். மேலும் ஜெயிலர் படத்தின் மிகப்பெரிய வெற்றிக்கு கடவுளின் ஆசியே காரணம் என ரஜினிகாந்த் குறிப்பிட்டார்.


Next Story

மேலும் செய்திகள்