"ஆடியோ லான்ச் இல்லைனா என்ன..?" - விஜய் மக்கள் இயக்க போஸ்டரால் பரபரப்பு

x

'லியோ' பட இசை வெளியீட்டு விழா ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், செங்கல்பட்டு மாவட்ட விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் ஒட்டியுள்ள போஸ்டரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெறுவதாக இருந்த 'லியோ' பட இசை வெளியீட்டு விழாவை, பாதுகாப்பு காரணங்களால் ரத்து செய்வதாக தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது. இந்நிலையில், அரசியல் வாசகங்கள் அடங்கிய போஸ்டர்களை, விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் நகர் முழுவதும் ஒட்டியுள்ளதால் பரபரப்பு கிளம்பியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்