விஜய், அஜித்தை யூடியூப் தளத்தில் ஓரம் கட்டும் தனுஷ்... மில்லியன் பார்வைகளை கடக்கும் வா வாத்தி பாடல்

x

'வாத்தி' படத்தில் இடம்பெற்ற 'வா வாத்தி...' பாடல் 100 மில்லியன் கிளப்பில் இணைந்துள்ளது. வெங்கி அட்லூரி இயக்கத்தில், தனுஷ் நடிப்பில் வெளியான 'வாத்தி' படத்திற்கு, ஜி.வி.பிரகாஷ் இசையமைத்திருந்தார். இப்படத்தில் இடம்பெற்ற அனைத்து பாடல்களும் ரசிகர்களை கவர்ந்த நிலையில், 'வா வாத்தி...' என்ற பாடல் தொடர்ந்து முணுமுணுக்க வைத்தது. இந்நிலையில் இப்பாடல் யூடியூப் தளத்தில் 10 கோடி பார்வைகளை கடந்து அசத்தியுள்ளது. இதன் மூலம், 100 மில்லியன் பார்வைகளை கடந்த அதிக பாடல்களுக்கு சொந்தக்காரர் என்ற பட்டியலில் தனுஷும் இணைந்துள்ளார்...


Next Story

மேலும் செய்திகள்