கோடிக்கணக்கான பார்வைகளை கொண்டு பட்டையை கிளப்பும் டிரெய்லர்...முஃபாசா - தி லயன் கிங்

x

டிசம்பரில் வெளியாகவுள்ள முஃபாசா தி லயன் கிங் படத்தின் டிரைலர் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ள நிலையில், இதுகுறித்து பார்க்கலாம் விரிவாக..

கார்ட்டூன் கதையம்சம் கொண்ட படம் என்றால் அது குழந்தைகளுக்கானது என்ற எழுதப்படாத விதியை மாற்றிய பெருமை தி லயன் கிங் படத்திற்கே சேரும்..

ஆம்... வயது வரம்பின்றி அனைவருமே கொண்டாடித் தீர்த்த படம் தான் தி லயன் கிங்.

1994ம் ஆண்டில் அனிமேஷன் படமாக வெளியான தி லயன் கிங், 2019ம் ஆண்டு தத்ரூபமான வடிவமைப்பில் சமீபத்திய தொழில்நுட்பங்களைக் கொண்ட அனிமேஷன் படமாக வெளியானது...

வால்ட் டிஸ்னி நிறுவனத்தின் பிரமாண்ட படைப்புகளில் மிகவும் கவனம் பெறும் திரைப்படமும் இதுவே...

2019ம் ஆண்டு வெளியான தி லயன் கிங் ஆங்கிலம் மட்டுமன்றி, தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளிலும் டப்பிங் செய்யப்பட்டு வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது..

காட்டை ஆளும் முஃபாசா எனும் சிங்கத்தின் மகனாக வரும் சிம்பா, தனது சித்தப்பாவான ஸ்காரின் சூழ்ச்சியில் இருந்து தப்பித்து மீண்டும் காட்டிற்கு எப்படி அரசனாகிறார் என்பது தான் இப்படத்தின் கதைக்கரு.

கருணையற்ற மனதுடன் இரையைத் தேடி அலையும் கழுதைப்புலி கூட்டத்துடன் சேர்ந்து ராஜ்ஜியத்தை ஸ்கார் கைப்பற்றுகிறதா? அல்லது சிம்பாவுக்கு சவால் விடுகிறதா? என்பது கதை நகர நகர தெரியவருகிறது.

குறிப்பாக தமிழில், முஃபாசா கதாபாத்திரத்திற்கு ரவிசங்கர், சிம்பா கதாபாத்திரத்திற்கு சித்தார்த் உட்பட ரோகிணி, சிங்கம் புலி, மனோ பாலா, ரோபோ ஷங்கர் உள்ளிட்ட பலர் குரல் கொடுத்து அசத்தியிருப்பர்.

மிகப்பெரிய ஹிட் அடித்த இப்படத்தின் அடுத்த பாகமாக, முபாசா தி லயன் கிங் படம் வரும் டிசம்பரில் வெளியாக இருக்கிறது..

காட்டுக்கு ராஜாவான முஃபாசா கடந்து வந்த பாதையையும், அதன் சகோதரரான ஸ்காரையும் மையமாக கொண்டு இத்திரைப்படம் உருவாகியுள்ளது.

இதன் டிரைலர் தற்போது வெளியாகி கோடிக்கணக்கான பார்வைகளை கடந்து வரவேற்பை பெற்றும் வருவதால், ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு எகிறியுள்ளது..

இந்த நிலையில், படத்தின் இந்தி படைப்பிற்காக தனது மகன்களான ஆர்யன் கான், ஆப்ராம் கான் ஆகியோரும் டப்பிங் பேசியுள்ளதாக பெருமிதம் தெரிவித்துள்ளார் நடிகர் ஷாருக்கான்.



Next Story

மேலும் செய்திகள்