தள்ளிப்போன 'சந்திரமுகி-2' படத்தின் ரிலீஸ்

x

தள்ளிப்போன சந்திரமுகி-2 படத்தின் ரிலீஸ்

செப்.15க்கு பதிலாக செப்.28ம் தேதிக்கு தள்ளிவைப்பு

பி.வாசு இயக்கத்தில் ராகவா லாரன்ஸ், கங்கனா ரனாவத், வடிவேலு உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகி வரும் சந்திரமுகி இரண்டாம் பாகம் வரும் 15ஆம் தேதி ரிலீசாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த சூழலில், தொழில்நுட்ப ரீதியிலான பிரச்சினை காரணமாக படத்தின் ரிலீஸ் வருகிற 28ஆம் தேதிக்கு தள்ளி வைக்கப்படுவதாக படக்குழு அறிவித்துள்ளது.

"24 மணி நேரத்தில் 10,000-க்கும் மேற்பட்ட டிக்கெட்டுகள் விற்பனை"

லியோ திரைப்பட விநியோக நிறுவனம் தகவல்

நடிகர் விஜயின் 'லியோ' திரைப்படத்திற்கான முன்பதிவு, இங்கிலாந்தில் தொடங்கியுள்ளது. இந்த நிலையில், லியோ திரைப்படத்தை இங்கிலாந்தில் வெளியிடும் நிறுவனம், படத்திற்கான முன்பதிவு தொடங்கிய 24 மணி நேரத்தில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட டிக்கெட்டுகள் விற்பனையாகியுள்ளதாக கூறியுள்ளது. இதன்மூலம் 1 லட்சம் பவுண்டுகளுக்கு மேல் வசூலாகியுள்ளதாகவும் முன்பதிவு தொடங்கிய 24 மணி நேரத்தில், எந்த தமிழ் திரைப்படத்திற்கும் இந்தளவு டிக்கெட்கள் விற்பனை ஆனதில்லை எனவும் குறிப்பிட்டுள்ளது.

==


Next Story

மேலும் செய்திகள்