நடிகர் பிரகாஷ்ராஜ் நின்ற இடத்தை கோமியம் கொண்டு கழுவிய பாஜகவினர்

x

சிவமோகா மாவட்டத்தில் உள்ள தனியார் கல்லூரியில் முற்போக்கு சங்கங்கள் இணைந்து திரையரங்கு சினிமா சமுதாயம் என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடத்தினர். இதில் பிரபல நடிகர் பிரகாஷ்ராஜ், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். தனியார் அமைப்புகளுக்கு கல்லூரியில் நிகழ்ச்சி நடத்த அனுமதி கொடுத்த கல்லூரி நிர்வாகத்திற்கு எதிராக, பாஜக உறுப்பினர்களும், பாஜக மாணவர் அமைப்பை சேர்ந்தவர்களும் எதிர்ப்பு தெரிவித்து, கல்லூரிக்கு வெளியே ஆர்ப்பாட்டம் நடத்தினர். நிகழ்ச்சி முடிந்த பிறகு பிரகாஷ்ராஜ் வெளியே சென்ற பின்னர், நிகழ்ச்சி நடந்த அறையை பாஜக மாணவர் அமைப்பினர் சிலர், பசு மாட்டின் கோமியத்தைக் கொண்டு சுத்தம் செய்தனர்‌.


Next Story

மேலும் செய்திகள்