தமிழ் சினிமா இதை செய்தால்தான் தழைக்கும் - வைரமுத்து | Vairamuthu

x

சிறிய படங்களுக்கு வழி விட்டால்தான் தமிழ் சினிமா தழைக்கும் என்று, 'கட்டில்' திரைப்பட இசை வெளியீட்டு விழாவில் வைரமுத்து தெரிவித்துள்ளார்.

இயக்குநர் கணேஷ் பாபு தயாரித்து இயக்கியுள்ள 'கட்டில்' என்ற திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை ராயப்பேட்டை சத்யம் திரையரங்கில் நடைபெற்றது. இதில், இயக்குநர்கள் கே.எஸ் ரவிக்குமார், மோகன் ராஜா, நடிகை சிருஷ்டி டாங்கே, இசையமைப்பாளர் ஸ்ரீ காந்த் தேவா, பாடலாசிரியர்கள் வைரமுத்து, மதன் கார்க்கி மற்றும் ஜாக்குவார் தங்கம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் பேசிய மேடையில் இசையமைப்பாளர் ஸ்ரீ காந்த் தேவா, இந்த படம் குடும்ப கதையாக நிச்சயமாக வெற்றி பெறும் என்றார். தொடர்ந்து பேசிய கவிஞர் வைரமுத்து, தமிழ் சினிமா சிறிய படங்களுக்கு வழிவிட வேண்டும் என்றார். சிறிய படங்கள் கொண்டாடப்பட வேண்டும், திரையரங்குகள் ஒதுக்கப்பட வேண்டும் என்றும், அப்போது தான் தமிழ் சினிமா தழைக்கும் என்றும் கூறினார்.


Next Story

மேலும் செய்திகள்