மீண்டும் திரைக்கு வரும் 'சுப்ரமணியபுரம்'... 15 ஆண்டுகளுக்கு பிறகு தமிழ்நாட்டில் ரீ-ரிலீஸ்

x

சசிகுமாரின் சுப்ரமணியபுரம் படம் தமிழ்நாடு முழுவதும் ரீ-ரிலீசாக உள்ளது. இயக்குநரும், நடிகருமான சசிகுமார், 2008ஆம் ஆண்டு உருவாக்கிய சுப்பிரமணியபுரம், திரைப்படம் தமிழ்நாடு மட்டுமின்றி, பாலிவுட் வரை மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. சசிகுமார், ஜெய், சமுத்திரக்கனி, ஸ்வாதியின் நடிப்பு, ஜேம்ஸ் வசந்தனின் இசை ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. படம் வெளியாகி 15 ஆண்டுகள் கடந்துள்ள நிலையில், வரும் ஆகஸ்ட் 4ஆம் தேதி ரீ-ரிலீசாக உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்