ஷாருக்கானின் ஜவான் திரைப்பட காட்சிகள் டிவிட்டரில் வெளியீடு

x

பாலிவுட் நடிகர் ஷாருக்கானின், ஜவான் திரைப்படத்தின் சில காட்சிகள் இணையத்தில் வெளியானதால் படக்குழுவினர் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

இயக்குநர் அட்லி இயக்கத்தில், பாலிவுட் பாட்ஷா ஷாருக்கானின் நடிப்பில், ரசிகர்களின் மிகுந்த எதிர்பார்ப்பில் உள்ள ஜவான் திரைப்படம், அடுத்த மாதம் திரைக்கு வரவுள்ளது. இந்நிலையில், ஜவான் திரைப்படத்தின் சில காட்சிகள் டிவிட்டரில் வெளியானது. இதனால் அதிர்ச்சியடைந்த படக்குழுவினர், சான்டாக்ரூஸ் காவல் நிலையத்தில் புகாரளித்தனர். தொடர்ந்து, படக்காட்சிகளை டிவிட்டரில் பதிவேற்றம் செய்த 5 டிவிட்டர் கணக்குகளை முடக்கிய போலீசார், இவ்விவகாரம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்