"என்ஜாய் என்ஜாமி"...சந்தோஷ் நாராயணனுக்கு...எதிராக கிளம்பிய புயல்

x

என்ஜாய் என்ஜாமி" பாடலுக்கு முன்பணம் வழங்கினோம் சந்தோஷ் நாராயணன் குற்றச்சாட்டுக்கு மாஜா நிறுவனம் விளக்கம். "என்ஜாய் என்ஜாமி" பாடல் மாஜா நிறுவனம் மூலம் எந்த வருமானமும் கிடைக்கவில்லை என இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் கூறிய குற்றச்சாட்டுக்கு மாஜா நிறுவனம் விளக்கமளித்துள்ளது. அதில், தங்கள்‌ நற்பெயருக்கு களங்கம்‌ ஏற்படுத்தும்‌ நோக்கில்,‌ சமீபத்திய தவறான குற்றச்சாட்டுகளை கடுமையாக மறுப்பதாகவும், சுயாதீன கலைஞர்களின்‌ படைப்புகள்‌ மற்றும்‌ இசைக்கான அர்ப்பணிப்புகளில்‌ தாங்கள்‌ பொறுப்புடன்‌ இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது. இருப்பினும் சம்மந்தப்பட்ட இரு கலைஞர்களுக்கு முன் பணம் வழங்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது


Next Story

மேலும் செய்திகள்