"தெய்வமே நீங்க எங்கேயோ போயிட்டீங்க" - வசனத்தின் சொந்தக்காரர் ஆர்.எஸ்.சிவாஜி மரணம் - சோகத்தில் ஆழ்ந்த திரையுலகம்

x

நகைச்சுவை நடிகர்களில் ஒருவராக பிரபலமாக அறியப்பட்ட ஆர்.எஸ். சிவாஜி உடல் நலக் குறைவால் காலமானார்...

மறைந்த தயாரிப்பாளரும், நடிகருமான எம்.ஆர்.சந்தானத்தின் இளைய மகனும், நடிகர் சந்தான பாரதியின் சகோதரருமான ஆர்.எஸ்.சிவாஜி 1980, 90 களில் கமல்ஹாசனின் படங்களில் தவறாமல் நடித்து வந்தவர்... கமலின் வெற்றிப் படங்களான விக்ரம், சத்யா, அபூர்வ சகோதரர்கள், மைக்கேல் மதன காமராஜன், குணா, அன்பே சிவம் என எல்லா படங்களிலும் இவர் நடித்துள்ளார். அதிலும் 1989ல் வெளியான அபூர்வ சகோதரர்கள் படத்தில் அவர் ஜனகராஜைப் பார்த்துப் பேசிய வசனமான "தெய்வமே நீங்க எங்கயோ போய்ட்டீங்க" என்ற வசனம் மிகவும் புகழ்பெற்றது. இன்றளவும் பல திரைப்படங்களில் இந்த வசனம் இடம்பெற்றுள்ளது.

8 தோட்டாக்கள், வனமகன், கோலமாவு கோகிலா உள்ளிட்ட படங்களில் நடித்த ஆர்.எஸ்.சிவாஜிக்கு தற்போது 66 வயதான நிலையில், உடல் நலக் குறைவால் காலமானார்...


Next Story

மேலும் செய்திகள்