இணையும் பாலிவுட், மோலிவுட் - லோகேஷின் `ரஜினி 171' மாஸ் அப்டேட் | rajinikanth

x

நடிகர் ரஜினிகாந்த் நடிக்கும் 171-வது படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கவுள்ளதாக சில நாட்களுக்கு முன்பு அறிவிப்பு வெளியானது. இதற்கான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியான நிலையில், படத்தின் டைட்டில் ஏப்ரல் 22-ஆம் தேதி வெளியாகும் என, லோகேஷ் கனகராஜ் எக்ஸ் தளத்தில் அறிவிப்பு வெளியிட்டிருந்தார். இந்நிலையில் பாலிவுட், மோலிவுட்டை சேர்ந்த 2 முக்கிய பிரபலங்கள் படத்தில் இணையவுள்ளதாக கூறப்படுகிறது. பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங், மலையாள நடிகர் பிருத்விராஜ் ஆகியோரை, ரஜினியின் 171-வது படத்தில் நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகி உள்ளது...


Next Story

மேலும் செய்திகள்