3 அடியில் ரஜினி சிலை.. சிறப்பு பூஜையும் - மதுரையே திரும்பி பார்க்க வைத்த ரசிகர்கள்

x

மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் ரஜினிக்கு சிலை வைத்து கடவுளாக ரசிகர் ஒருவர் வழிபட்டு வருகிறார். திருமங்கலம் பகுதியை சேர்ந்த முன்னாள் துணை ராணுவப்படை வீரரான கார்த்திக், ரஜினி மீது கொண்ட அதீத பற்றால், ராசிபுரத்தில் செய்யப்பட்ட 3 அடி உயர ரஜினி சிலையை வீட்டிற்கு எடுத்து வந்து யாகம் வளர்த்து சிறப்பு பூஜை செய்துள்ளார். பின்னர் சிலையை பூஜை அறையில் வைத்து குடும்பத்துடன் சேர்ந்து தினசரி வழிபட்டு வருகிறார்


Next Story

மேலும் செய்திகள்