பின்னழகு அறுவை சிகிச்சை... பிரபல நடிகை திடீர் மரணம் - அதிர்ச்சியில் ரசிகர்கள்

x

43 வயதான சில்வினா லூனா, தொலைக்காட்சி தொகுப்பாளராகவும், திரைப்பட நடிகையாகவும் இருந்துள்ளார். இவர், பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை செய்த பின்னர், 2011ஆம் ஆண்டு சிறுநீரகப் பிரச்சினை ஏற்பட்டுள்ளது. இதனால், வாரத்திற்கு மூன்று முறை டையாலிசிஸ் சிகிச்சை பெறும் நிலைக்கு தள்ளப்பட்டார். ஒவ்வொரு முறையும் 4 மணி நேரம் சிகிச்சை பெற வேண்டும் என்பதால், அவரது உடல்நிலை மிகவும் மோசமானது. உயிர் காக்கும் கருவிகள் மூலம் சில்வினா லூனா சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், அவரது உடல்நிலை மிகவும் மோசமானதால், சிகிச்சை பலனின்றி உயிரிழந்த‌தாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். இதற்கு முன்பு கன்னட சீரியல் நடிகை செத்தன்ன ராஜும், அமெரிக்க அழகி கிரிஷ்டினா ஆஸ்டன் உள்ளிட்டோரும் பிளாஸ்டிக் சிகிச்சை செய்துகொண்ட பின்னர் உடல்நலக்குறைவு ஏற்பட்டு உயிரிழந்த‌து குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்