அதிகாரிகளை மிரட்டும் நோக்கில் மனு..பிரபல நடிகருக்கு அபதாரம் நீதிமன்றம் அதிரடி..

x

நடிகர் ராஜேந்திரநாத் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அதில், நெல்லை மாவட்டம் முக்கூடலில் உள்ள முத்துமாலையம்மன் கோயிலில் தனி நபர்கள், கோயில் டிரஸ்டிகள் எனக் கூறி சட்ட விரோதமாக பணம் வசூலிப்பதாக குறிப்பிட்டிருந்தார். இது குறித்து ஏற்கனவே புகாரளித்தும் உரிய நடவடிக்கை எடுக்காததால், அதிகாரிகள் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்து மனு அளிக்கப்பட்டதுஅதிகாரிகளை தவறான நோக்கத்துடன் மிரட்டி துன்புறுத்தும் நோக்கத்தில் இந்த அவமதிப்பு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகக் கூறி மனுதாருக்கு 25 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து உத்தரவிட்டார். மேலும், பணத்தை கலைஞர் நூற்றாண்டு நூலகத்திற்கான வங்கிக் கணக்கில் செலுத்த உத்தரவிடப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்