ரஜினி, விஜய்யை புறக்கணித்த நயன்தாரா | Vijay | Rajinikanth | Nayanthara

x

இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நடிகை நயன்தாரா தற்போது 20 பிரபலங்களை பின்தொடர்கிறார். சமீபத்தில் நடிகை நயன்தாரா இன்ஸ்டாகிராமில் கணக்கை தொடங்கினார். இதைத் தொடர்ந்து, அவருக்கு மூன்று மில்லியன் ஃபாளோயர்கள் உள்ளனர். இந்நிலையில், நயன்தாரா 20 பிரபலங்களை பின்தொடர்கிறார். குறிப்பாக நடிகைகள் பார்வதி, அபர்னா பாலமுரளி, அலியாபட், தீபிகா படுகோனே, கேத்ரீனா கைஃப், சமந்தா, ஹாலிவுட் நடிகையான ஜெனிஃபெர் அனிஸ்டன் உள்ளிட்டோரை பின்தொடர்கிறார். நடிகர்களில் பாலிவுட் நடிகரான ஷாருக்கானை அவர் பின் தொடரும் நிலையில், ரஜினிகாந்த், விஜய் உள்ளிட்ட தமிழ் நடிகர்களை அவர் பின்தொடரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்