"என்னது எங்களுக்கே இல்லையா?"... எக்ஸ்ட்ரா டிக்கெட் கொடுக்காத மேனேஜரை காதோடு அடித்த ரஜினி ரசிகர்கள்

x

திண்டுக்கல்லில் ஜெயிலர் படத்திற்கு கூடுதல் டிக்கெட் கேட்டு, ரஜினி ரசிகர்கள் தாக்கியதால், தியேட்டர் மேலாளர் பலத்த காயமடைந்தார். திண்டுக்கல்லில் உள்ள திரையரங்கு ஒன்றின் மேலாளர் மாயாண்டியிடம், ரஜினி ரசிகர்கள் கண்ணன் மற்றும் ஜோசப் ஆகியோர் கூடுதல் டிக்கெட் கேட்டு வாக்குவாத‌த்தில் ஈடுபட்டுள்ளனர். பின்னர், ரசிகர்கள் இரண்டு பேரும் மேலாளர் மாயாண்டியை தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் காதில் பலத்த காயமடைந்த மேலாளர் மாயாண்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.


Next Story

மேலும் செய்திகள்