பிரபல சினிமா தயாரிப்பு நிறுவனம் காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார்

பிரபல சினிமா தயாரிப்பு நிறுவனமான லைக்கா ப்ரொடக்சன் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளது....
x

பிரபல சினிமா தயாரிப்பு நிறுவனமான லைக்கா ப்ரொடக்சன் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளது. அதில் NPK narendramari என்ற பெயரில் கடந்த ஜூலை மாதம் 26க்கும் மேற்பட்ட ஈமெயில்கள் அனுப்பி பணம் பறிக்கும் நோக்கில் செயல்படுவதாக புகார் அளித்துள்ளது. தங்கள் பெயரை கெடுக்கும் வகையில் பல்வேறு மெயில் முகவரிகளுக்கும் இது போன்ற தகவல்களை பரப்பி அவதூறு செய்வதாகவும், குற்றம் சாட்டியுள்ளனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்