LEO-வில் அந்த 20 நிமிட காட்சி - போட்டுடைத்த லோகேஷ் கனகராஜ் | Actor Vijay | Lokesh Kanagaraj

x

லியோ படத்தில் 20 நிமிட FLASHBACK காட்சிகள் பொய்யாக கூட இருக்கலாம் என இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கூறியது இணையத்தில் பேசுபொருளாகியுள்ளது. கைதி, விக்ரம் பட வரிசையில் லியோ படமும், லோகேஷ் கனகராஜின் LCU வரிசையில் கொண்டு வரப்பட்டுள்ளது. லியோ படத்தில் மன்சூர் அலிகான் கூறும் FLASHBACK காட்சிகள் ரசிகர்களிடம் விமர்சனத்தை சந்தித்த நிலையில், விஜயின் லியோ தாஸ் கதாபாத்திரம் குறித்து மன்சூர் அலிகான் பேசுவது பொய்யாக இருக்கலாம் என நேர்காணலில் லோகேஷ் கூறியுள்ளார். இதனை வரவேற்றும், கடுமையாக விமர்சித்தும் ரசிகர்கள் கருத்து பதிவிட்டு வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்