ஜவான் கொடுத்த லைஃப் டைம் செட்டில்மென்ட்!

x

உலகம் முழுவதும் ஷாருக்கான் நடிப்பில் வெளியான ஜவான் திரைப்படம் இதுவரை 520 கோடி ரூபாய் வசூல் சாதனை செய்துள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.அட்லி இயக்கத்தில், ஷாருக்கான், விஜய் சேதுபதி, யோகி பாபு மற்றும் நயன்தாரா நடித்த ஜவான், தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் கடந்த 7ம் தேதி வெளியானது.இந்த படத்தின் ஓடிடி, இசை மற்றும் திரையரங்க வெளியீட்டு உரிமம் ஆகியவை 400 கோடிக்கும் மேல் விற்கப்பட்டதாக கூறப்பட்டது. அனிருத் இசையில் இப்படத்தின் மூன்று பாடல்கள் வெளியாகி நல்ல வரவேற்பினை பெற்றன. இதுவரை இல்லாத அளவில் படத்துக்கு மிகப் பெரிய ஓபனிங் கிடைத்திருப்பதாகவும், படமும் சிறப்பாக இருப்பதாகவும் பாலிவுட் ஊடகங்கள் தெரிவித்து வருகின்றன. இந்நிலையில் இரண்டு நாட்களில் 240 கோடிய 47 லட்ச ரூபாய் வசூல் செய்ததாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தது. இதன் தொடர்ச்சியாக, நான்கு நாட்களில், உலகம் முழுவதும் 520 கோடியே 79 லட்ச ரூபாய் வசூல் செய்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்