"எங்க தலைக்கு தில்ல பாத்தியா?" லியோ இங்கிலாந்தில்...? வெளியான மாஸ் அப்டேட்

x

நடிகர் விஜய் நடித்துள்ள லியோ திரைப்படத்தின், "நான் ரெடிதான்" பாடலின் சில வரிகளும், புகைப்பிடிக்கும் காட்சிகளும் தணிக்கை செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியானது. இது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், இங்கிலாந்தில் லியோ படத்தை வெளியிடும் அகிம்சா என்டர்டெயின்மென்ட் நிறுவனம் ஓர் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி தணிக்கை செய்யப்படாத அனைத்து காட்சிகளும் கொண்ட படமாக, இங்கிலாந்தில் லியோ வெளியிடப்படும் என அறிவித்துள்ளது. லோகேஷ் கனகராஜின் திரைக்கதைக்கு மதிப்பளிப்பதாகவும், படத்தின் மூல வடிவத்தை ரசிகர்கள் முழுமையாக கொண்டாட வேண்டும் என்றும் அகிம்சா என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தெரிவித்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்