பந்தா காட்டிய கங்கனாவின் படத்தை பங்கம் செய்யும் ஓடிடி நிறுவனங்கள் - பாலிவுட் குயினுக்கு வந்த சோதனை

x

கங்கனா நடித்த தாக்கத் திரைப்படத்தின் ஓடிடி மற்றும் சாட்டிலைட் உரிமையைப் பெற எந்த நிறுவனமும் முன்வரவில்லை என்கிற தகவல் பாலிவுட் வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாலிவுட் குயின் கங்கனா ரணாவத் ஆக்‌ஷன் ஹீரோயின் அவதாரம் எடுத்த தாகத் திரைப்படம் வரலாறு காணாத நஷ்டம் அடைந்துள்ளது. 90 கோடிக்கு உருவாக்கப்பட்ட தாக்கத், 2 கோடியை கூட வசூலிக்காத படுதோல்வி படம் என்கிற பெயரை பெற்றுள்ளது. இந்த படத்தை ரிலீஸிஸ்கு பிறகு நல்ல தொகைக்கு விற்று விடலாம் என படக்குழு நினைத்திருந்தது. ஆனால், படம் வெளியான பிறகு முன்பு அணுகிய ஓடிடி மற்றும் சாட்டிலைட் நிறுவனங்களும் பின்வாங்கியுள்ள நிகழ்வு படக்குழுவினரை வேதனையில் ஆழ்த்தியுள்ளது.Next Story

மேலும் செய்திகள்