ஆபத்தை உணராமல் 40 அடி உயரத்தில் ஜெயம் ரவி ரசிகர்கள் செய்த செயல்
நடிகர் ஜெயம் ரவியின் கட்-அவுட்டுக்கு ரசிகர்கள் மாலை அணிவித்து பால் அபிஷேகம் செய்த வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. இயக்குநர் அகமத் இயக்கத்தில், ஜெயம் ரவி, நயன்தாரா உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள இறைவன் திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியானது. இந்நிலையில், குரோம்பேட்டையில் உள்ள திரையரங்கில் ஜெயம் ரவியின் சுமார் 40 அடி உயர கட்-அவுட்டில் ஏறி, அவரது ரசிகர்கள் மாலை அணிவித்து பால் அபிஷேகம் செய்தனர். ஆபத்தை உணராமல் ரசிகர்கள் செய்த இந்த செயல், பலரையும் அதிருப்தி அடையச் செய்தது.
Next Story
